வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 மார்ச் 2021 (15:47 IST)

வருமான வரித்துறையை கிண்டல் செய்து டாப்ஸி டிவீட்!

வருமான வரித்துறையினர் மூன்று நாட்களாக நடிகை டாப்ஸி வீட்டில் சோதனை செய்த நிலையில் இப்போது அவர் ஒரு டிவீட் செய்துள்ளார்.

நேற்று நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இன்றும் அந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இருவருமே தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் இருவர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சோதனை முடிந்துள்ள நிலையில் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை மறைப்பு சம்மந்தமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை சமூகவலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டாப்ஸி பகிர்ந்துள்ள டிவீட்டில் ‘3 நாள்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடத்தினார்கள்.
  1. என்னுடைய பாரிஸ் பங்களா சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை நாள்கள் வரப்போகின்றன.
  2. என் பெயரில் இருப்பதாக சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீதை தேடினார்கள். எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால், அந்தப் பணம் வேண்டாம் என்று நான் மறுத்தேன்
  3. நிதியமைச்சர் சொன்னது போல 2013 ஆம் ஆண்டு நடந்த வருமான வரி சோதனைகளின் நினைவுகள் என்னுள் உள்ளன.
பி.கு: இனி நான் மலிவானவள் இல்லை’  எனக் கூறியுள்ளார்.