அது எனக்கு தோன்றினால் மட்டுமே திருமணம்- ரகசியத்தை உடைத்த டாப்ஸி!

Papiksha| Last Updated: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (11:08 IST)
தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் ஆடுகளம், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி.  மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார்.


 
இதனைத் தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருவதோடு தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தென்னிந்திய சினிமாஸில்  இவரால்  முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை எனவே பாலிவுட் பக்கம் பறந்தார். அக்கட தேசத்தில் அம்மணிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால்  இந்தியில் படுபேமஸ் ஆனார்.
 
கடைசியாக டாப்ஸி நடிப்பில் வெளியான கேம் ஓவர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. நிலையில் தற்போது தனது திருமணத்தை குறித்து பேசியுள்ள அவர், நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நடிகரில்லை. இப்போது என் வீட்டில் திருமண பேசச்சு நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என டாப்ஸி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :