பிகிலுக்கு திகில் காட்ட வரும் முன்னனி நடிகர்களின் படங்கள்!

Papiksha| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (19:48 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுக்கு ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று ரிலீஸாகவுள்ளது.  படத்தின் பர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக், சிங்கிள் ட்ராக் என அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துவிட்டது. 


 
தற்போது படத்தின் ரிலீசுக்காக மரண வெய்ட்டிங்கில் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருந்தாலும் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் பிகில் படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே அக்டோபர் 4-ம் தேதி தனுஷின் அசுரன் திரைப்படம், விஜய்சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. 
 
மேலும் பிகில் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் கார்த்தியின் கைதி திரைப்படமும் ரிலீசாகவுள்ளது.   இதனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பிகில் படத்தை வாங்கியுள்ள விநியோகிஸ்தர்களுக்கும் திகில் வந்துவிட்டது.    
         


இதில் மேலும் படிக்கவும் :