இக்கட்டான சூழ்நிலையில் கவினை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நபர்கள்!

Papiksha| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:49 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கில் லொஸ்லியாவை சந்திக்க வந்த அவரது பெற்றோர் மற்றும் தங்கைகள் கவின் காதல் விஷயத்தை பற்றி நிறைய அறிவுரைகள் கூறி திட்டினார்கள். மேலும் கவினுடன் இருக்கும் காதலை எல்லாம் இங்கேயே தூக்கி எறிந்துவிட்டு  வா என்று கூறி அவரது அப்பா மிகவும் கறாராக கூறினார். 


 
இதனால் கவின் மிகவும் மனமுடைந்து அழுது வருத்தப்பட்டார். இதுவரை முகன், தர்ஷன் , லொஸ்லியா , வனிதா , சேரன் போன்றவர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டில் வந்து சந்தித்துவிட்டு சென்றனர். தற்போது அடுத்த நபராக கவினை சந்திக்க அவரது அக்காவும், அப்பாவும் வருவதாக இருந்தனர். கவினின் அம்மா பண மோசடி விவகாரத்தில் கைதானதனால் இவர்கள் இருவர் மட்டும் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியானது. 
 
ஆனால், சற்றுமுன் கிடைத்துள்ள தகவலின் படி கவினை சந்திக்க அவரது நண்பர்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இது நாளைய முதல் ப்ரோமோவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லொஸ்லியா விஷயத்தில் கவின் அனைவரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து வைத்துள்ளதால் அனைவரும் வெறுக்கும் இந்த வேலையில் கவினின் நண்பர்கள் அது அத்தனையும் அவருக்கு சொல்லி விளக்குவார்கள். 
 
மேலும் அவரது வீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை குறித்து எடுத்துரைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கவின் எப்படி எதிர்கொள்வர் என தெரியவில்லை. நாளை என்னதான் நடக்கிறது என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.  
 


இதில் மேலும் படிக்கவும் :