கேரவன் இல்லாமல் நடுரோட்டில் உடை மாற்றிய தமன்னா - எந்த படத்திற்கு தெரியுமா?

Papiksha Joseph| Last Updated: வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:27 IST)

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தனது இரண்டாவது படமான "கல்லுரி" படத்தில் ஹிட் நடிகையாக பேசப்பட்டார்.

அதையடுத்து சில வருடங்கள் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழி படங்களில் முயற்சித்து வந்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆக லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான பையா படத்தில் நடித்து அனைவரது பேவரைட் நடிகையாக வலம் வர துவங்கினார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் தமன்னா நடித்தது குறித்த அனுபவத்தை பெற்றி பேட்டி ஒன்றில் கூறிய இயக்குனர் லிங்குசாமி " இந்த படத்தில் முதலில் நயன்தாரவை தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினோம் ஆனால், அவர் கேட்ட சம்பளம் கொடுக்கமுடியாததால் தமன்னாவை தேர்வு செய்தோம். மேலும், பையா படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு ரோட்டில் நடந்தது. அப்போது எங்களிடம் கேரவன் இல்லாததால் இரண்டு பெண்கள் புடவை பிடித்துக்கொண்டு நிற்பார்கள் அதில் சென்று தமன்னா சிரமம் பார்க்காமல் துணி மாற்றிக்கொண்டு வருவார். அவ்வளவு ஒரு கம்ஃபோர்ட் ஜோன்ல தமன்னா எங்களுடன் வேளை பார்த்தார் என இயக்குனர் லிங்குசாமி கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :