1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (14:29 IST)

மீண்டும் சுசீந்திரன் உடன் கூட்டணி! – ஈஸ்வரன் மேடையில் உறுதி செய்த சிம்பு!

சுசீந்திரன் இயக்கி சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்து மீண்டும் சுசீந்திரனுடன் மற்றொரு படத்தில் இணைய போவதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு. அந்த வகையில் சிம்பு நடித்து சுசீந்திரன் இயக்கியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சிம்பு மீண்டும் சுசீந்திரனுடன் ஒரு படம் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சிம்புவின் மாநாடு, பத்து தல படங்களை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.