செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (09:08 IST)

என்ன செல்வா சார்! அதுதான் இதுவா? – கலாய் வாங்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அது நெட்டிசன்கள் இடையே பகடி செய்யப்பட்டும் வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2010ல் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படம் வெளியான காலத்தில் பெரிதாக கண்டுக்கொள்ளப்படாவிட்டாலும் தற்போது சினிமா விமர்சகர்களாலும், திரை ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படமாக உள்ளது. இந்த படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் விதமாக கடந்த ஆண்டு இந்த படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் நடிப்பில் இயக்குவதாக செல்வராகவன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளியுள்ளது. அதேசமயம் அந்த போஸ்டரில் உள்ள ஓவியம் பிரெஞ்சு காமிக்ஸ் வரை கலைஞர் மேத்யூ லாஃபேவின் ஓவியத்தில் இருந்து காப்பிடிக்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் பலர் இரண்டு ஓவியங்களையும் ஒப்புமைப்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.