Breakdown இல்லாமல் இன்னொரு ஹாலிவுட் படத்தையும் ஆட்டையப் போட்டாங்களா… ரசிகர்கள் கருத்து!
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. அவர் நடித்த துணிவு திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தை இன்று கொண்டாடித் தணித்துக் கொண்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் படம் பார்த்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை நேர்மறையான விமர்சனங்களே அதிகமாக வந்துகொண்டு இருக்கின்றன. படம் ரிலீஸாகும் நாளில் அஜித் போர்ச்சுகலில் ரேஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே இந்த படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் என்பதின் ரீமேக் சென்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது படம் பார்த்த சில ரசிகர்கள் 2022 ஆம் ஆண்டு வெளியான மற்றொரு ஹாலிவுட் படமான தி லாஸ்ட் சீன்” படத்தையும் காப்பியடித்து சிலக் காட்சிகளை வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.