ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (16:36 IST)

மேடையில் ஓவராகப் போன சுசீந்தரன்… வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்!

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகி நிதி அகர்வால் பேசும் போது அநாகரீகமாக நடந்துகொண்ட இயக்குனர் சுசீந்தரனை சமூகவலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. இதையடுத்து சென்னையில் நேற்று அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு திரையரங்கில் நடந்தது.

அப்போது படத்தின் நாயகி நிதி அகர்வால் பேசும் போது அந்த படத்தின் இயக்குனர் சுசீந்தரன் நடந்து கொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. நிதி அகர்வாலுக்கு அருகே வந்து நின்ற சுசீந்தரன் ‘சிம்பு மாமா ஐ லவ் யு’ என சொல்ல சொல்லி அங்கேயே நின்றுகொண்டார். ஆனால் அந்த நடிகை அதை சமாளித்துக் கொண்டு பேசி முடித்தார். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகவே சுசீந்தரனை வச்சு செய்ய ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.