1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (18:37 IST)

சிம்புவை லவ் பண்ண நிதி அகர்வாலை கட்டாயப்படுத்தினேனா? சுசீந்திரன் விளக்கம்!

சிம்புவை லவ் பண்ண நிதி அகர்வாலை கட்டாயப்படுத்தினேனா? சுசீந்திரன் விளக்கம்!
’சிம்பு மாமா ஐ லவ் யூ’ என்று நீதி அகர்வாலை லவ் பண்ண கட்டாய படுத்தவில்லை என்றும் அந்த படத்தில் வரும் ஒரு காட்சியை தான் நான் கூறினேன் என்றும் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்
 
நேற்று சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் நாயகி நீதி அகர்வால் பேசிக்கொண்டிருக்கும் போது அருகில் வந்த இயக்குனர் சுசீந்திரன் ’மாமா ஐ லவ் யூ சொல்லு, சிம்பு ஐ லவ் யூ சொல்லு’ என்று கூறிக்கொண்டே இருந்தார். இருப்பினும் கடைசி வரை நிதி அகர்வால் அவ்வாறு கூறவில்லை 
 
சுசீந்திரனின் இந்த செயல் பெரும் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து சமூகவலைதளத்தில் பலர் சுசீந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகையிடம் லவ் பண்ண சொல்லி கட்டாயப்படுத்துவது, அது காமெடியாக இருந்தாலும் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாகவும் கூறினர்
 
இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் சுசீந்திரன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் நாயகி நிதி அகர்வாலை அருகில் வைத்துக்கொண்டு கூறியிருப்பதாவது: நேற்று ஆடியோ விழாவில் நிதி அகர்வாலை நான் சர்ச்சைக்குரிய வகையில் பேச வைத்ததாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் நிதிஅகர்வாலின் கேரக்டர் சிம்புவை விரட்டி விரட்டி ஐ லவ் யூ என்று சொல்லி காதலிக்கும் ஒரு கேரக்டர். சிம்பு விலகி விலகிப் போகும் ஒரு கேரக்டர். இதை குறிப்பிடும் வகையில்தான் நான் ஆடியோ விழாவில் அவ்வாறு கூறினேன். ஆனால் அதை ஒரு சிலர் தவறாக எடுத்து விமர்சனம் செய்து வருகின்றனர்’ என்று சுசீந்திரன் கூறியுள்ளார்.