திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:42 IST)

லலித் மோடி – சுஷ்மிதா சென் உறவில் விரிசலா?

லலித் மோடி சுஷ்மிதா சென் உறவில் விரிசல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியை நடிகை சுஷ்மிதாசென் திருமணம் செய்து கொண்டதாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. அதுபற்றி சுஷ்மிதா சென் தரப்பில் ‘திருமணம் இல்லை மோதிர மாற்றமில்லை மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எப்போதும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு நன்றி என்றும் மற்றவர்களுக்கு உங்கள் வேலை எதுவோ அதை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்றும் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது லலித் மோடி சுஷ்மிதா சென் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென்னோடு இருக்கும் புகைப்படத்தை மாற்றியுள்ள லலித் மேலும் அவர் பற்றிய குறிப்பையும் மாற்றியுள்ளார்.