புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (11:11 IST)

கர்மா மிகவும் மோசமானது: ரவீந்தர்-மகாலட்சுமி திருமணம் குறித்து வனிதா!

vanitha
கர்மா மிகவும் மோசமானது என்று எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்பது கர்மாவுக்கு தெரியும் என்றும் நடிகை வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மறுமணம் செய்த போது அதை கடுமையாக விமர்சனம் செய்தவர் ரவீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரவீந்தர் மறுமணம் செய்து கொண்டதை அடுத்து அவரை குறிப்பிடும் வகையிலேல் வனிதா இந்த ட்விட்டை தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது 
 
அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி கவனிக்க நேரமில்லாத அளவுக்கு சந்தோசமாகவும் பிஸியாக இருக்கிறேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் கர்மா மிகவும் மோசமானது என்றும் எப்போது, எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது கர்மாவுக்கு தெரியும் என்றும் நான் கர்மாவை முழுவதுமாக நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
நடிகை வனிதாவின் இந்த டுவிட் முழுக்க முழுக்க ரவிந்தர் மகாலட்சுமி திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.