செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (22:13 IST)

சுஷாந்த் சிங் தற்கொலை... போதை பொருள் வழக்கு...ரியாவுக்கு ஆதரவு தெரிவித்த டாப்ஸி

சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு வாரிசு அரசியல் காரணம் என்று கூறி பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்தின் காதலி ரியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில்,  சகோதரி கூறியதால் சுஷாந்திற்காக போதைப் பொருள் வாங்கியதாக ரியாவின் சக்ரபர்தியின் சகோதரர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் சூடு பிடித்ததை அடுத்து,  போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியாவின் சகோதரர் சௌவிக் மற்றும் சுஷாந்தின் மேலாளரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்  போதைப்பொருளை சுஷாந்திற்க்காக வாங்க ரியா கூறியதாக சௌவிக் தெரிவித்துள்ளார்.

இதனால் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ரியா சக்கரவர்த்திக்கு ஆதரவாக வித்தியா பாலன் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகை டாப்ஸி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சமூகத்தில் வெற்றியடைந்த ஆணுடன் பெண் இருந்தால் அவர்கள் பணம் சுரண்டுபவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு ரியாவை 15 ஆண்டுகளாகத் தெரியும் எனவும்  15 கோடி ரூபாய் திருடு போனதாகக் கூறப்படும் நிலையில அவை எங்கே எனவும் ஒரு செல்வந்தருடன் இணைந்திருந்தால் அவர் பணத்திற்காக அவருடம் பழகுகிறார் என்று கூறுவது தவறு எனத் தெரிவித்துள்ளார்.