செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (21:36 IST)

கருணாநிதி தான் எனக்கு டீச்சர்: வித்தியாசமான ஆசிரியர் தின வாழ்த்து கூறிய குஷ்பு

வித்தியாசமான ஆசிரியர் தின வாழ்த்து கூறிய குஷ்பு
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று செப்டம்பர் 5 டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது 
 
ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பலர் தங்களுடைய ஆசிரியர்களின் மலரும் நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதும் ஹாப்பி டீச்சர்ஸ் டே என்ற ஹேஷ்டேக் தற்போதும் டிரண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டரில் சற்றுமுன் ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: பொறுப்பு, மரியாதை மற்றும் கண்ணியத்துடன் ஒரு அரசியல்வாதியாக இருக்க எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த ஒரு பெரிய மனிதருக்கு நான் நன்றி தெரிவிக்காவிட்டால் என் நாள் முடிவடையாது. மறைந்த டாக்டர். கருணாநிதி அவர்கள் நான் அரசியலில் நுழைந்தபோது எனக்கு ஒரு சிறந்த ஆசிரியர். எப்போதும் அவரை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன்’ என்று கூறியுள்ளார். குஷ்புவின் இந்த டுவிட் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது