1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (18:45 IST)

மனைவியின் ஷூட்டிங்கை நேரில் பார்வையிட்ட சூர்யா! வைரலாகும் புகைப்படம்!

2000ம் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா  திருமணத்துக்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து  '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்தார். இந்தப்படங்கள் எல்லாம் வணிக ரீதியில் பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்டன. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. 


 
அதற்கடுத்ததாக ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத புது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி சென்னையில் துவங்கி சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை சூர்யாவின் '2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, 'குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கி வருகிறார். 
 
டார்க் காமெடி திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்தது  இதில் ஜோதிகாவின் கணவரும், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருமான, நடிகர் சூர்யா பங்குபெற்றுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.