1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (15:07 IST)

ஜித்து ஜோசப் படத்தில் நடிக்கும் மேலும் ஒரு பிரபலம்!

`பாபநாசம்' படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கயிருக்கும் புதிய படத்தில் ஜோதிகா, கார்த்தி ஜோதிகா இருவரும் நடிக்கின்றனர். படத்தில்  இவர்கள் இருவரும் அக்கா, தம்பியாக நடிக்க இருக்கிறார்களாம்.
‘தேவ்’ படத்துக்கு பிறகு கார்த்தி கைவசம் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படம் மற்றும் இயக்குநர் ஜீத்து  ஜோசப் படம் என மூன்று படங்கள் உள்ளது. இதில் ஜித்து ஜோசப் படத்தில் கார்த்தியுடன் ஜோதிகாவும் நடிக்கின்றனர். இதில் இருவரும்  அக்கா, தம்பியாக நடிக்கவுள்ளனர். 
மேலும்‘ வியாகாம் 18’ நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் ‘2D’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. எனவே படத்துக்கான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது. தற்போது ஜோதிகா இரண்டு படங்களில் நடித்து  வருகிறார் என்பது மற்றுமொரு தகவல்.
இப்படத்தில் ஜோதிகா, கார்த்திக்கு அப்பாவாக பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.