அடுத்தடுத்து வெளியான 'காப்பான்' டீசர், ரிலீஸ் தேதி: சூர்யா ரசிகர்கள் குஷி!

Last Modified திங்கள், 15 ஏப்ரல் 2019 (08:51 IST)
பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்றிரவு 7 மணிக்கு வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆனது. சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் இந்த டீசர் கவர்ந்தது. இந்த நிலையில் டீசர் வெளியான ஒருசில மணி நேரத்தில் இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்னவே சூர்யாவின் 'என்.ஜி.கே வரும் மே 31ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 'என்.ஜி.கே' வெளியாகி சரியாக 90 நாள் இடைவெளியில் சூர்யாவின் 'காப்பான்' வெளியாவதால் உற்சாகத்தின் உச்சியில் அவரது ரசிகர்கள் உள்ளனர்
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக சூர்யாவும் சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :