வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:07 IST)

ஒரே நாளில் வெளியாகும் விக்ரம்-சூர்யா திரைப்படங்கள்

இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால் இருதரப்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியாகியபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் வரும் மே 31ஆம் தேதி சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள 'என்.ஜி.கே. திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே மே 31ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படமும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தேதியை விட்டால் அத்துடன் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பதால் வேறு வழியில்லாமல் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரே நாளில் ரிலீஸாகி 'பேட்ட', விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றது போல் என்.ஜி.கே மற்றும் கடாரம் கொண்டான் ஆகிய படங்களும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது