திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:16 IST)

13 வருடமாக ஒரு ஹிட் கூட இல்லை… ஆனால் இப்போ வரிசையாக நான்கு படங்கள் – உற்சாகமான விக்ரம் ரசிகர்கள்!

நடிகர் விக்ரம் இப்போது நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது அவர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விக்ரம் 2007 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பின்னர் அவர் பல படங்களில் அவர் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தினாலும் எந்த படமும் பெருவெற்றி பெறவில்லை. இதனால் கிட்டத்தட்ட 13 வருடங்களாக அவர் ஹிட் கொடுக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது விக்ரம் வரிசையாக நான்கு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படங்கள் அனைத்தும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படங்கள் என்பதால் அவர் மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்புவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறாராம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா, மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜின் பெயரிடப்படாத படம் மற்றும் இயக்குனர் ஹரி இயக்கும் புதிய படம் என வரிசையாக நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளாராம். அதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு விக்ரம் படங்கள் வரிசையாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.