ராஜதந்திரம் அனைத்தும் வீணா போச்சே... ஆரி கிட்ட சாரி கேட்ட பாலாஜி!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சனா , பாலாஜி மற்றும் ரம்யா மூவருக்கும் ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அர்ச்சனா இந்த வாரத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை தனித்தனியாக அறைக்குள் வரவைத்து சில பல கேள்விகளை அவர்களிடம் கேட்ட பிக்பாஸ் ரம்யாவிடம் பல கேள்விகளை கேட்டு கொஞ்சம் டைம் பாஸ் செய்தார்.
அதையடுத்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பாலாஜி சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதை எண்ணி வருத்தப்பட்டு ஆரி மற்றும் ரியோவிடம் மன்னிப்பு கேட்டார். நேற்று தான் பாலா ரம்யாவிடம் அவர்களை பற்றி குறை கூறினார். இன்று அப்படியே உல்ட்டாவாக மாறிவிட்டார்.
பாலா சாரி கேட்கும்போது ரம்யா மைண்ட் வாய்ஸ் : "என்ன இவன் நேற்று நம்மகிட்ட ஒன்னு சொல்றான் இங்கு வந்து சாரி கேட்கிறான் நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாய் போயிடுச்சே" என்றவாறு முகத்தை உம்முன்னு வைத்துக்கொண்டார். பாலா உன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயேப்பா... பிள்ளைய நல்லா கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறியே..