திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (13:58 IST)

அடுத்தடுத்து விஜய் ரிஜெக்ட் பண்ணிய கதைகளில் நடிக்கும் சூர்யா!

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கங்குவா ரிலீஸான பின்னர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் காஷ்மீரா பரதேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை, அன்பறிவ் மற்றும் பிடி சார் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதை முதலில் விஜய்க்கு ஆர் ஜே பாலாஜியால் சொல்லப்பட்டது. ஆனால் அவர் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாது என நிராகரித்தார். அந்த கதையைதான் சில மாற்றங்கள் செய்து இப்போது சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் மட்டுமில்லாமல் சூர்யா நடித்து முடித்துள்ள ‘சூர்யா 44’ படக் கதையும் கார்த்திக் சுப்பராஜ் முதலில் விஜய்க்கு சொல்லி அவர் நிராகரித்தக் கதைதான் என்று சொல்லப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து விஜய் நிராகரித்த கதைகளில் சூர்யா நடித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.