1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (07:49 IST)

‘சூர்யா 44’ கேங்ஸ்டர் படம் இல்லை… இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தகவல்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட மூன்றே மாதங்களில் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்ற பிம்பம் உருவானது. ஆனால் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் “சூர்யா 44 கேங்ஸ்டர் படம் இல்லை. காதலை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதை.” எனக் கூறியுள்ளார்.