வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (19:16 IST)

பரோட்டா, வறுத்த கறி தான் வேண்டும் ! ரோட்டில் உருண்டு புரண்ட இளைஞர்...

சென்னை அண்ணா சாலையில் இளைஞர் ஒருவர் தனக்கு பரோட்டாவும் வறுத்த கறியும் தான் வேண்டுமென புரண்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞர் திடீரென்று நடுரோட்டுக்கு வந்து சாலையில் படுத்து உருண்டு புரண்டார். அதைப் பார்த்த காவலர் அவரை ஓரமாகக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அவர் மறுத்தார்.

பின்னர்   என்ன வேண்டும் என போலீஸார் அவரிடம் கேட்டபோது, தனக்கு பரோட்டாவும் வறுத்த கறியும் வேண்டுமென அவர் கூறியுள்ளார். அதைக் கேட்டகாவலர் தான்  வாங்கித் தருவதாக கூறிய பின் அவர் சாலியில் ஓரமாக  சென்று உட்கார்ந்து கொண்டார்.