1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (14:13 IST)

ஆப்பிரிக்க கலாச்சார நடனமாடி அசத்திய நடிகை ஸ்ரீரம்யா - வீடியோ!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த பல நடிகைகள் பின்னர் வாய்ப்புக்கிடைக்காமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போவதெல்லாம் வரலாறும் கண்ட உண்மை. ஆனால், அதிலும் சிலர் சற்று வேறுபட்டு ரசிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காகவே தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள்.

அந்த லிஸ்டில் ஸ்ட்ராங்கான இடம் பிடித்த நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்கள் அனைவரும்  
 பரீச்சியமான பிடித்தமான நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால், அந்த படத்தை தவிர அவர் நடித்த ஜீவா, வெள்ளைகார துறை, காக்கிசட்டை இப்படி வேறு எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஸ்ரீ திவ்யாவின் தங்கையும் ஒரு நடிகை. தமிழில் யமுனா என்ற படத்தில் நடித்திருந்த ஸ்ரீ ரம்யா " ‘1940 Lo Oka Gramam' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதர்காக ஆந்திர அரசு சிறந்த நடிகைக்கான நந்தி விருதை வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் ஸ்ரீரம்யா  மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் கலாச்சார நடனமாடி அசத்தியுள்ளார் . இதற்கான பயிற்சியை கடந்த 2018ல் டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமாக நடனமாடி வைரலான வீடியோ தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.