1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (11:13 IST)

என்னடா இது சூர்யாவுக்கு வந்த சோதன... பிரபல சேனலை கழுவி ஊத்தும் ரசிகர்கள்!

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் டிவிட்டரில் பிரபல டிவி சேனல் ஒன்றை கடுமையாக திட்டி வருகின்றனர். 

 
நடிகர் சூர்யா தமிழ சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர். ஆனால், சமீப காலமாக சூர்யா தனது கதை தேர்வுகளில் கோட்டைவிட்டு வருகிறார். இதனால் நிலையான வெற்றியை சுவைக்காமல் சினிமாவில் ஆட்டம் கண்டுள்ளார் என்றே கூறலாம். 
 
ஆனால், நடிப்பை தவிர்த்து தற்போது படங்களை தயாரிப்பதில் சூர்யா அதிகம் கவனம் செலுத்துவது போல தெரிகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முடிவுக்கு வரவுள்ளதால் பல விருது வழங்கும் விழாக்கள் நடந்து வருகின்றன. 
 
அப்படி ஒரு விழாவான ஜீ டிவி ஒரு விருது விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜீ சினி அவாட்ஸ் என அழைப்படும் இந்த நிகழ்வை ப்ரமோட் செய்யும் விதமாக பவர்ஃபுல் கண்கள் யாருக்கு உள்ளது என கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் சூர்யாவின் பெயர் இல்லை. 
 
இதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் இந்த சேனலை திட்டி ஹேஷ்டேக் ஒன்றை டிரெண்டாக்கி உள்ளனர்.