வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ!
தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பொல்லாதவன் , ஆடுகளம் , விசாரணை , வட சென்னை , அசுரன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி திறமையான இயக்குனராக பார்க்கப்படுகிறார்.
கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்து அப்படத்தில் நடித்திருந்த கலைஞர்களுக்கும் பெருமையை தேடி தந்தது. இப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவேண்டும் என மக்களே ஆசைப்படுமளவிற்கு அப்படத்தின் வெற்றி வழிவகை செய்தது.
இந்நிலையில் அசுரனின் அசாதாரண வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் தற்போது தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்பதை கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தை VtheVcreations நிறுவனம் தயாரிப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் #Suriya40 ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.