1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (20:11 IST)

வதந்திக்கு முற்றுப்புள்ளி: அடுத்த படம் இதுதான் என வெற்றிமாறன் தரப்பு அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ’அசுரன்’ திரைப்படத்தை அடுத்து அவர் அடுத்து இயக்கவுள்ள ’படம் சூரி கதாநாயகனாக நடிக்கும் படம் என்று கடந்த மாதமே செய்திகள் வெளிவந்தது. ஆனால் திடீரென சூரி படத்தை அவர் கைவிட்டு விட்டதாகவும் சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கவிருவதாகவும் கூறப்பட்டது 
 
இதனையடுத்து பின்னர் திடீரென விஜய்க்கு வெற்றிமாறன் சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும் உடனடியாக தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும், சூரி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களை அவர் தள்ளி வைத்து விட்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படம் சூரி கதாநாயகனாக நடிக்கும் படம் தான் என அவரது தரப்பினர் தற்போது உறுதி செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை முடித்த பின்னர்தான் அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
விஜய் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் நிச்சயமாக ’தளபதி 65’ படத்தை வெற்றிமாறன் இயக்கவில்லை என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த வதந்தி முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது