வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (12:32 IST)

நடிகர் அஜித்தை நேரில் சென்று சந்தித்த சூர்யா - கார்த்தி!

நடிகர் அஜித்தை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து அஜித் தந்தை மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அஜித்தின் தந்தை பிஎஸ் மணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.
 
தளபதி விஜய் உள்பட ஒரு சிலர் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜித் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மறைவிற்கு தங்களது மற்றும் தங்களது குடும்பத்தின் இரங்கலை தெரிவித்தனர்
 
சூர்யா மற்றும் கார்த்தி அஜித் வீட்டிற்குள் காரில் சென்றபோது எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran