1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:59 IST)

3 வேடங்களில் சூர்யா: வேற லெவலில் சிறுத்தை சிவா திட்டம்!

surya 42
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 42’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வருவதாகவும், இதுவரை நடிக்காத கேரக்டர்கள் அவை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா பல படங்களில் இரண்டு வேடங்களில் நடித்த நிலையில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா ’வணங்கான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது