‘சூரரைப் போற்று இந்தி ரீமேக் ஓடிடியில் வெளியாகிறதா?....’ சூர்யாவின் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கபோவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழுக்கு இசையமைத்த ஜி வி பிரகாஷே இந்தி படத்துக்கும் இசையமைக்க உள்ளதை அறிவித்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்துக்குப் பின்னர் ஜி வி பிரகாஷ் இந்தி படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் வரிசையாக அக்ஷய் குமார் நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுத்துள்ளது.