பிரபல நடிகருக்கு வாழ்த்துகூறிய அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் சூரிக்கு அதிதி ஷங்கர் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டார் சூரி. இதையடுத்து, ஜில்லா, சாமி-2 , வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில், விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார், இளையராஜ இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இன்று சூரி தனது 45 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குனர் ஷங்கரின் மகளும் விருமன் பட ஹீரோயினுமான அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் சூரிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அத்துதன் விருமன் பட ஷூட்டிங்கில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.