செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (17:55 IST)

’சூர்யா 42’ படத்தில் சூர்யாவுக்கு 5 வேடங்களா? ரசிகர்கள் ஆச்சரியம்!

surya 42
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் சூர்யா ஐந்து வேடங்களில் நடித்து இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்பதும் இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் சரித்திர கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் அரத்தர்,   வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய ஐந்து கேரக்டர் இருப்பதாக சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் மூலம் தெரிய வந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த ஐந்து கேரக்டர்களிலும் சூர்யா தான்  நடித்து வருகிறார் என்பதும் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் கூறப்பட்டு வருகிறது. சரித்திர திரைப்படத்தில் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று வேடங்களில் மட்டுமே நடிகர்கள் நடித்துள்ள நிலையில் சூர்யா 5 வேடங்களில் நடிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது