1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (19:30 IST)

விருமன் பட வெற்றிக்கு உதவியவர்களுக்கு தெரிவித்த சூர்யா!

karthy
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விருமன் திரைப்படத்தின் விளம்பர பப்ளிசிட்டிக்கு பணியாற்றியவர்களுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12 தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக  ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா தயாரிப்பில்,  கார்த்தி நடிப்பில் உருவாகி வெற்றிபெற்றுள்ள இரண்டாவது படம் இது. அடுத்தும், சூர்யா- கார்த்தி- முத்தையா கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என எதிர்கார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விருமன் படம் வெற்றி பெற விளம்பர பப்ளிசிட்டி செய்ய பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, சூர்யா ஒரு பதிவிட்டுள்ளார். அதில், போஸ்டர் பப்ளிசிட்டி நந்தகுமார், பேப்பர் விளம்பரம் முபாரக் ஆகிய இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றிதெரிவித்துள்ளார் சூர்ய்யா.