திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (08:17 IST)

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசினார் இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா. அப்போது பேசிய அவர் “கார்த்தியைப் பருத்திவீரன் படத்துக்குப் பிறகு இந்த படம் பார்த்தபின்னர்தான் கார்த்தியைக் கட்டிப்பிடித்து பாராட்டினேன்” எனக் கூறியுள்ளார்.