ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:29 IST)

என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் நான் ஒப்புக் கொள்வேனா?- அரவிந்த் சுவாமியின் கவனம் ஈர்த்த பேச்சு!

96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமி தற்போது படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்படி ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது நடிகர்களின் ரசிகர் மன்றம் பற்றி பேசியுள்ளார். அவரிடம் நீங்கள் ஏன் உங்கள் ரசிகர்கள் மன்றங்களை வைத்துக் கொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப் போகிறார்கள். நான் சினிமாவை விட்டு சென்றுவிட்டார்கள் அவர்கள் என்ன ஆவார்கள்? அது எந்தவிதத்தில் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? என் மகன், எதாவது ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் நான் அதை ஏற்பேனா? என் மகனுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துவிட்டு அப்புறம் எப்படி நான் ஊரார் மகனுக்கு வேறொரு அட்வைஸ் கொடுக்க முடியும்?” என பொறுப்புடன் பதிலளித்துள்ளார்.