புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (11:26 IST)

சென்ஸார் ஆனது என்.ஜி.கே டீஸர் – மகிழ்ச்சியில் சூர்யா டீம் !

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி,கே. படத்தின் டீஸர் நாளை ரிலிஸாக உள்ள நிலையில் இன்று தணிக்கைக் குழுவிற்குக் காட்டி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் என்.ஜி.கே படம் கடந்த தீபாவளிக்கே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போய் ஒருவழியாக கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக இந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்களைக் கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக நாளை மாலை முதல் இந்தப் படத்தின் டீஸர் திரையரங்கங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாக இருக்கிறது.

அதை முன்னிட்டு இன்று என்.ஜி.கே படத்தின் டீசர் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. டீஸரைப் பார்த்து முடித்த தணிக்கை அதிகாரிகள் அனைவரும் பார்க்கும் ‘யு’ சான்றிதழை அளித்துள்ளனர். இதனால் சூர்யா மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இந்த சான்றிதழ் நாளை வெளியாக இருக்கும் டீசருக்கு மட்டுமே. படத்திற்கான சான்றிதழ் முழுமையாகப் படத்தை அதிகாரிகள் பார்த்த பின்னே வழங்கப்படும்.

நாளை மாலை முதல் தேவ் படம் வெளியாகும் திரையரங்கங்களில் என்.ஜி.கே படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது.