செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (18:58 IST)

'இந்தியன் 2' படத்தில் ஆர்.ஜே.பாலாஜி! என்ன கேரக்டர் தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒவ்வொரு பிரபலமாக இணைந்து வருகின்றனர்.

இந்த படத்தில் முதலில் காஜல் அகர்வால், அதன்பின் சித்தார்த், பின்னர் சில நாட்களுக்கு முன் டெல்லி கணேஷ் உள்பட பல பிரபலங்கள் இணைந்து வரும் நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

'இந்தியன்' முதல் பாகத்தில் சேனாதிபதியை பிடிக்கும் அதிகாரியாக நெடுமுடிவேணு நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. 'இந்தியன் 2' படத்திலும் நெடுமுடிவேணு அதே கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் அவருடைய உதவியாளராக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக படக்குழுவினர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.