செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:57 IST)

’சூர்யா 42’ படத்தில் இணைந்த 4 காமெடியன்கள்: காமெடி படம் இயக்குகிறாரா சிறுத்தை சிவா?

surya 42
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் 4 காமெடி நடிகர்கள் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சிறுத்தை சிவா காமெடி படத்தை இயக்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த்ராஜ் ஆகிய நான்கு காமெடி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இன்றைய படப்பிடிப்பிலும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் காமெடி காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கிட்டத்தட்ட ஒரு முழு நீள காமெடி படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் ரசிகர்களை திருப்திபடுத்த ஆக்ஷன் காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளும் உண்டு என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.