ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (15:43 IST)

அஜித் - பிரசாந்த் நீல் சந்திப்பு உண்மையா? அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா தகவல்..!

அஜித் மற்றும் பிரசாந்த் நீல்  சந்தித்ததாகவும் இருவரும் மூன்று படத்தில் இணையப் போவதாகவும் அதில் ஒரு படம் கேஜிஎப்3 படத்துடன் கனெக்சன் ஆகும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ஒரு சிலர் இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் அஜித் பிரசாந்த் நீல் சந்திப்பு நடைபெறவில்லை என்றும் இருவரும் இணைந்து திரைப்படம் உருவாக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த செய்திகளை தெளிவுபடுத்துவதற்காக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அஜித் மற்றும் பிரசாந்த் நீல் சந்திப்பு உண்மைதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் இருவரும் இணைந்து படம் செய்வதாக இதுவரை எந்தவித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்றும் ஒருவேளை எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அஜித் பிரசாந்த் நீல் சந்திப்பு உண்மை என்பது தெரிய வந்துள்ள நிலையில்,  இருவரும் ஒரு படத்தில் இணைவார்களா? அப்படியே இணைந்தாலும் அந்த படத்தில் கேஜிஎஃப்3 படம் கனெக்சன் ஆகுமா? என்பதை எல்லாம் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்த பின் தான் அவர் அடுத்த பட இயக்குனர் குறித்து முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran