1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (07:56 IST)

அஸர்பைஜான் ஷூட்டிங்கை முடித்த விடாமுயற்சி படக்குழு!

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.

அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் சென்னைக்குத் திரும்பிவிட்டனர். அங்கு இப்போது மகிழ் திருமேனி மற்ற நடிகர்களை வைத்து வேறு சில காட்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து கிளம்பி ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் விடாமுயற்சி படக்குழு தற்போது அஸர்பைஜானில் எடுக்க வேண்டிய அனைத்துக் காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். ஷூட்டிங் முடிந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.