மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி: களைகட்டப்போகும் பிக்பாஸ் வீடு!

புரமோவே இவ்வளவு மொக்கைன்னா? நிகழ்ச்சி எப்படி இருக்கும்?
siva| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (20:33 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியின் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வர இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தியின் மிகப் பெரிய ஆளுமையான போட்டியாளராக இருந்து வந்தார். அவருடைய தந்திரமான விளையாட்டை சக போட்டியாளர்கள் புரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஆனது

இந்த நிலையில் திடீரென கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி நாமினேஷனில் சிக்கிய நிலையில் அவர் குறைவான வாக்கு பெற்றதாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து சாப்பிடுவதைத் தவிர வேறு எதையுமே செய்யாத ஒரு சில போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் பிக்பாஸ் வீடு மீண்டும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :