ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (18:15 IST)

சூப்பர் ஸ்டாரின் 'குண்டூர் காரம்' படம் வசூல் சாதனை

gundur karam
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில், திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான படம் குண்டூர் காரம். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஸ்ரீலீலா, மீனாட்சி ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம்   நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.94 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முதல் நாளில் அதிக வசூல் குவித்த மகேஷ் பாபு படங்களில் குண்டூர் காரன் படம் முதலிட பிடித்துள்ளது. அதேபோல்  முதல் நாளில், அதிக வசூல் குவித்த பான் இந்தியா படம் அல்லாத படங்களில் இப்படம் சாதனை படைத்துள்ளது.