'83’ படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
83 படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கடந்த 1983-ஆம் ஆண்டு வென்ற நிலையில் இந்த நிகழ்வை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த திரைப்படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஓடி வருகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி '83' படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், 83 படம் அற்புதமாக உள்ளது, இப்படத்தின் தயாரிப்பாளருக்கு பெரிய வாழ்த்துகள் மற்றும் இப்படத்தின் நடித்த ரன்வீர். ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கும், மற்ற நடிகர்களுக்கும் மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்