செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:35 IST)

சூப்பர் ஸ்டார் வீட்டில் இனிப்பு கிடையாது!

சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை  கடந்த 2 ஆம் தேதி சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இதுகுறித்த விசாரணையை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்தி வந்த நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை மும்பை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

ஷாருக்கனின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கேடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சமீபத்தில் சிறை சாப்பாடு பிடிக்காத ஆர்யன் கானுக்கு ஷாருக்கான் ரூ.4500 பணம் அனுப்பிவைத்தார். 

இந்நிலையில், மும்பையிலுள்ள ஷாருக்கானின் ’மங்கட் இல்லத்தில்’ ஆர்யன் கானின் தாய் கவுரி கான், மகன் வீட்டிற்கு வரும் வரை இனிப்புப் பண்டங்களை சமைக்க வேண்டாமென உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.