1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (08:26 IST)

ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா?

ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
 
இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை இறங்கினர். 
 
சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் டை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் ஒருவன். 
பின்னர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டான். ஷாருக்கான் மகனுடன் மேலும் 13 பேரையும் பிடித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். 
 
இதில் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.