செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (12:41 IST)

காவலில் ஷாருக் மகன்! ஜாமீன் மனு ஒத்திவைப்பு

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
 
சொகுசுகப்பலில் நடந்த பார்ட்டி ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டான். ஷாருக்கான் மகனுடன் மேலும் 13 பேரையும் பிடித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். 
 
இதில் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனிடையே மும்பை போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.