வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (23:36 IST)

நண்பர்களின் தயாரிப்பில் நடிக்கும் விஷால்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் நடிப்பில் உருவாகவுள்ள படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தை விஷாலின் நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து  தயாரிக்கவுள்ளனர்.

இப்படம் விஷாலின் 32 வது படமாகும். எனவே இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக  நடிகை சுனைனா நடிக்கவுள்ளாதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஷால் நடிப்பில் தற்போது எனிமி படம் தயாராகி வருகிறாது. அதேபோல், வீரமே வாகை சூடு படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் ரிlலிஸாகும் எனக் கூறப்படுகிறது.