1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (09:51 IST)

நண்பர்களுக்காக நடிக்கும் படத்தில் சூப்பரான ஐடியா கொடுத்த விஷால்- மகிழ்ச்சியில் நந்தா & ரமணா!

நடிகர் விஷால் தனது நண்பர்களான நந்தா மற்றும் ரமணாவுக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க உள்ளாராம்.

நடிகர் விஷால் தனது பொருளாதார பிரச்சனைகளை சமாளிப்பதற்காக இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்போது எனிமி மற்றும் விஷால் 31 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடியும் நிலையில் இருக்க, இப்போது அடுத்து ஒரு படம் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை எவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க முடியுமோ அவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க சொல்லி நண்பர்களுக்கு கூறியுள்ளாராம் விஷால். இதனால் கணிசமான தொகை லாபமாக கிடைக்க உத்தரவாதம் உள்ளதாக இருவரும் இப்போது மகிழ்ச்சியில் உள்ளனராம். இந்த படத்தை புதுமுக இயக்குனர் வினோத் இயக்க உள்ளாராம்.