1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:13 IST)

ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்…ஏன் தெரியுமா?

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, இயக்குனர் ஷங்கரிடம் ஏன் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஆஹா. இன்ன ந் ந் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.  சமீபத்தில் இ ந் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  சூப்பர் மகேஷ்பாபு, இயக்கு  க்கு நர் ஷங்கரிடம் மன்னிப்புக் கேட்ட தகவலை வெளியிடுள்ளார். அதில், ஒரு முறை மும்பையில் உள்ள ஹோட்டலுக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது, ஒரு பெண்கள் என்னிடம் வந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டனர்.நான் குடும்பத்துடன் இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டேன். அப்போது என் அருகில் இருந்த நபர் அவர்கள் இருவரும் இயக்குநர் ஷங்கரின் மகள்கள் என்றனர். நான் உடனே  ஷங்கரிடம் உங்களின் மகள்கள் எனத் தெரியாது எனத் தெரிவித்து மன்னிக்கும்படி கேட்டேன்.  பின்னர் அவரது மகள்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் இயக்குநர் ஷங்கரிடம் மன்னிப்புக்கேட்டசம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்பாபுவின் குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.