1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (18:06 IST)

பாடகியாகவும் அறிமுகமான அதிதி ஷங்கர்: என்ன பாடல் தெரியுமா?

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சமீபத்தில் நடிகையாக அறிமுகமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். கார்த்தி ஜோடியாக ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை முத்தையா என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் நடிகையை அடுத்து பாடகியாகவும் அதிதி ஷங்கர் மாறியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள ’கானி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பளித்த இசை அமைப்பாளர் தமன் அவர்களுக்கு நன்றி என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
சிறுவயதிலிருந்தே தனக்கு பாடகியாக வேண்டும் என்பதே விருப்பம் என்றும் அந்த விருப்பம் தற்போதுதான் நிறைவேறி உள்ளதால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்